தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் ஜான் பிரகாஷ் (வயது 25). மீனவர். இவர் தூத்துக்குடி 2-ம் கேட் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா விரைந்து சென்று ஜான் பிரகாசை கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
இதே போன்று தூத்துக்குடி மையவாடி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இசக்கிராஜா (21) என்பவரை தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் கைது செய்தார். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிலுவைப்பட்டி சுனாமி காலனியை சேர்ந்த காளிதாஸ் (23) என்பவரை தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா கைது செய்தார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story