கடைக்குள் புகுந்த சிறுத்தை பூனை குட்டி மீட்பு
கடைக்குள் புகுந்த சிறுத்தை பூனை குட்டி மீட்பு
ஊட்டி
குன்னூர் மற்றும் அதை சுற்றி உள்ள வனப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வழிதவறி அல்லது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று சிறுத்தை பூனை குட்டி ஒன்று வழி தவறி குன்னூர் நகருக்குள் வந்தது.
மக்கள் நடமாட்டம் உள்ள நகரில் நடமாடியதுடன், ஒரு கடைக்குள் புகுந்து தஞ்சமடைந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். குன்னூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தை பூனை குட்டியை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை பூனை குட்டியை பாதுகாப்பாக கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
Related Tags :
Next Story