ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடங்கியது
ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடங்கியது
ஊட்டி
ஊட்டியில் உறைபனி தாக்கம் தொடங்கியது. இரவு, அதிகாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
உறைபனி தாக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்தது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நவம்பர் மாதம் உறைபனி கொட்டியது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி நகரில் நேற்று முன்தினம் இரவு கடுங்குளிர் நில வியது. நேற்று அதிகாலையில் உறைபனி தாக்கம் தொடங்கியது. இதனால் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது.
செல்போனில் புகைப்படம்
ஊட்டி காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பிங்கர்போஸ்ட், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகளில் உறைபனி படர்ந்து காணப் பட்டது. காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் புல்வெளிகளில் உறைபனி படர்ந்து இருந்ததை கண்டு ரசித்தனர்.
அத்துடன் அவர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மீது உறைபனி காணப்பட்டது. இதனை அகற்றிய பின்னர் வாகனங்களை இயக்க முடிந்தது.
புல்வெளிகளில் பனி
உறைபனி தொடங்கியதால் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் லாரி கள், வாகனங்களில் பேட்டரி மூலம் என்ஜினை சூடேற்றி இயக்கும் வாகனங்களைத் தவிர, மற்ற டீசல் வாகனங்களின் என்ஜின் மீது சூடுதண் ணீர் ஊற்றி இயக்க வேண்டிய நிலை உள்ளது.
அதிகாலை நேரங்களில் பச்சை பசேலென காணப்படும் புல்வெளிகள் வெள்ளை நிறத்தில் வெண்மை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. தென் மாநிலங்களின் குளிர்பிரதேசம் என்று அழைக்கப்படும் ஊட்டியில் பனிக்காலத்தால் வட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
குளிர்காயும் பொதுமக்கள்
கடுங்குளிரை போக்க கூலித்தொழிலாளர்கள், மூட்டை தூக்கும் தொழி லாளர்கள் மற்றும் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். வழக்கமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டியில் பனிக்காலத்தை அனுபவிக்க வருகை தருவார்கள்.
தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரண மாக கட்டுப்பாடு இருப்பதால் அவர்கள் வரவில்லை. மாலை 6 மணிக்கு மேல் கடுங்குளிர் நிலவுகிறது. நேற்று ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
Related Tags :
Next Story