2 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது


2 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2021 9:34 PM IST (Updated: 20 Dec 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வெளிப்பாளையம்:
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
நாகை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், நாகை காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஏலம் விடப்படும். 
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, நாகையில் உள்ள பழைய ஆயுதப்படை வளாகத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த 2 மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. 
வாலிபர் கைது
இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டு செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 20) என்பவரை பிடித்து  போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆயுதப்படை வளாகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் ைகது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர்.

Next Story