எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும்


எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும்
x
தினத்தந்தி 20 Dec 2021 9:42 PM IST (Updated: 20 Dec 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

வேளாங்கண்ணி:
எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
கோவில்களில் அமைச்சர் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, எட்டுக்குடி, திருவாய்மூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோவில்களை பார்வையிட்டு குடமுழுக்கு நடந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 7 மாதங்களில் 150-க்கும் மேற்பட்ட கோவில்களை ஆய்வு செய்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு
திருக்குவளையில் உள்ள தியாகராஜர் கோவில், எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் திருவாய்மூர் தியாகராஜர் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலுக்கு வர வேண்டிய வாடகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு அருகே உள்ள திருக்குவளை தியாகராஜர் கோவில் குளத்தை தூர்வாரி பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்படும். எட்டுக்குடி முருகன் கோவிலில் திருப்பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் முடிந்து விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்.
விரைவில் தேரோட்டம்
மேலும் ஓடாமல் உள்ள இந்த கோவில் தேரை சீரமைத்து விரைவில் தேரோட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், எம்.எல். ஏ.க்கள் நாகை மாலி, பூண்டிகலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் ராணி, வட்டார வேளாண்மை வளர்ச்சி குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், தருமபுர ஆதீன தம்பிரான்  மாணிக்கவாசக சுவாமிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story