15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஓய்வுபெற்ற பணியாளர் சங்க மாநில பொருளாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அனந்தசயனன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மூர்த்தி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பழனி, ஏழுமலை, ஜெய்சங்கர், புருஷோத்தமன், முத்து, குமரகுரு, கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பயிர் கடன் வழங்குவதில் மாநில அளவில் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும், மாநில தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும், தற்போது பணியில் இருந்து வரும் பணியாளர்களுக்கும் முறையே கருணை ஓய்வூதியம்,
ஓய்வூதியம் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பொங்கல் விழாவிற்கு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை தனித்தனியாக பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
முடிவில் வடக்கு மண்டல துணைத்தலைவர் ஞானசேகர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story