பொதுமக்களை தாக்கிய 4 பேர் கைது
பொதுமக்களை தாக்கிய 4 பேர் கைது
வீரபாண்டி,
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் ரேஷன் அரிசியை சரக்கு ஆட்டோவில் கடத்தும் முயற்சி நடந்தது. இதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரிசி கடத்தல்காரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பொதுமக்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பொதுமக்களை தாக்கிய இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த குமாரவேல் (வயது 19) பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (21), முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணன் (21), விக்னேஷ் (25) ஆகியோரை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story