பள்ளிபாளையம் அருகே வடமாநில இளம்பெண் கூட்டு பலாத்காரம் காதலன் உள்பட 3 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே வடமாநில இளம்பெண் கூட்டு பலாத்காரம் காதலன் உள்பட 3 பேர் கைது
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநில தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தங்கி ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அதே நூற்பாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பால்ராஜ் (வயது 24) என்பவரும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், பால்ராஜிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
மருத்துவ சோதனை
இந்த நிலையில் இளம்பெண்ணை பால்ராஜ் அங்குள்ள அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதோடு நிற்காமல் தனது காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்தார். இதையடுத்து பால்ராஜ் தனது நண்பர்கள் பிரதீப்குமார், மனோஜ்குமாரை அங்கு அழைத்தார். அதன்பேரில் அங்கு சென்ற நண்பர்கள் 2 பேர் மற்றும் பால்ராஜ் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இதனால் அந்த இளம்பெண் மயக்கம் அடைந்தார். இதை கண்டதும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மயக்கம் தெளிந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை ஆலை மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார். இதுகுறித்து வெப்படை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் இளம்பெண்ணை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருந்த 3 பேரையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் 3 பேரும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புகொண்டனர். இதையடுத்து பால்ராஜ், பிரதீப்குமார், மனோஜ்குமார் ஆகிய 3 ேபரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story