தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Dec 2021 11:00 PM IST (Updated: 20 Dec 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

பகலிலும் எரியும் மின் விளக்குகள்

  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி-போளூர் செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், சார் பதிவாளர் அலுவலகம், ஆதிதிராவிடர் விடுதி ஆகிய பகுதிகளில் 3 மாதத்துக்கு மேலாக பகலிலும் தொடர்ந்து சாலையோர மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கிறது. மின்வாரியத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
  -ஜெகன்நாதன், கடலாடி.

குளம் சீரமைக்கப்படுமா?

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா ரெண்டாடி கிராமத்தில் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் பாசி படிந்துள்ளது. அதன் கரையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். கரையைச் சுற்றிலும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பாசி படிந்த நீரால் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தைச் சுற்றி வேலி போட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -த.சதீஷ்குமார், ரெண்டாடி.

Next Story