விவேகானந்தர் மண்டபத்திற்கு 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்


விவேகானந்தர் மண்டபத்திற்கு 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
x
தினத்தந்தி 20 Dec 2021 11:54 PM IST (Updated: 20 Dec 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு 2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டது.

கன்னியாகுமரி, 
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம்.  இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயங்குகிறது. நேற்று முன்தினம் கடல் சீற்றம் ஏற்பட்டதால் படகு போக்குவரத்து தாமதமாக மதியம் 2 மணிக்கு தொடங்கியது. 
இந்தநிலையில் நேற்று காலையும் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பகல் 12.45 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு வந்ததை தொடர்ந்து படகு போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து அங்கு ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலா பணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர். திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் நேற்று இயக்கப்படவில்லை.

Next Story