ஜாமீனில் உள்ள வரவரராவ் நிச்சயம் சிறையில் சரண் அடைய வேண்டும்-ஐகோர்ட்டில் என்.ஐ.ஏ. வாதம்
மருத்துவ ஜாமீனில் உள்ள வரவரராவ் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் நிச்சயம் சிறை திரும்ப வேண்டும் என ஐகோர்ட்டில், என்.ஐ.ஏ. வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மருத்துவ ஜாமீனில் உள்ள வரவரராவ் உடல்நிலை சீராக உள்ளதால் அவர் நிச்சயம் சிறை திரும்ப வேண்டும் என ஐகோர்ட்டில், என்.ஐ.ஏ. வலியுறுத்தி உள்ளது.
மருத்துவ ஜாமீன்
எல்கர் பரிஷத் வழக்கில் கவிஞர் வரவரராவ் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்டான் சுவாமி சிறையில் மரணம் அடைந்து விட்டார். மற்ற பலர் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இந்தநிலையில் 83 வயதான கவிஞர் வரவரராவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இவரது ஜாமீன் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் நிதின் ஜம்தார், எஸ்.வி. கோட்வால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் கூறியதாவது:-
சிறையில் சரண் அடைய...
வரவரராவ் சிகிச்சை பெற்று வரும் நானாவதி ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு ஒரு பக்க மருத்துவ அறிக்கையை அளித்துள்ளது. அதில் வரவரராவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே அவர் கண்டிப்பாக சிறையில் சரண் அடைய வேண்டும். அவரை போல முதியவர்கள் பலர் சிறையில் உள்ளனர். அவர்களில் பலருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த நிலையில் உடல் நிலை சீராக உள்ள வரவரராவுக்கு விலக்கு அளிக்க முடியாது. அவர் உடனடியாக சிறை திரும்ப கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story