சிவகாசி சிவன் கோவிலில் தேரோட்டம்
ஆருத்ரா திருவிழாவையொட்டி சிவகாசி சிவன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பூஜையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதே போல் சிவகாசி கடக்கோவில், முருகன் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் அழைத்து வரப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ரதவீதியில் வரும் போது ஏராளமான பக்தர்கள் கூடி நின்று சாமி கும்பிட்டனர்.
Related Tags :
Next Story