ஆட்டோ டிரைவர் தற்கொலை
ஆட்டோ டிரைவர் தற்கொலை
அழகியபாண்டியபுரம்,
இறச்சகுளத்தை அடுத்துள்ள பேச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 50). ஆட்டோ டிரைவரான இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணமாகி விட்டது. இதற்கிடையே அவருடைய மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
பின்னர் பாலசுந்தரம் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story