நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி கொத்தனார் பலி


நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 21 Dec 2021 1:59 AM IST (Updated: 21 Dec 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கொத்தனார் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கபிஸ்தலம்;
சுவாமிமலை அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கொத்தனார் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த துயரம் நிகழ்ந்தது.
துக்க நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகேயுள்ள அலவந்திபுரம் நடுத்தெருவில் வசித்து வந்தவர் சேகர்(வயது 38). இவர்  கொத்தனார் வேலை செய்து வந்தார். 
இவர் தனது மனைவி ஜெயந்தியுடன் கும்பகோணத்தை அடுத்துள்ள சோழபுரம் மேலான மேடு கிராமத்தில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது
சுவாமிமலை அருகே புளியஞ்சேரி மெயின் ரோட்டில் ராஜா குளம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே நின்ற ஒரு நாய் மீது எதிர்பாராதவிதமாக சேகர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி இருவரும் தலைகுப்புற கீழே விழுந்தனர். இதில் சேகர், அவரது மனைவி ஜெயந்தி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
கணவன் பலி மனைவிக்கு சிகிச்சை
உடனடியாக சிகிச்சைக்காக இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஜெயந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story