சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை.
ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிவன் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடராஜப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் மட்டும் தான் பஞ்சலோகத்திலான பஞ்சசபை 5 உற்சவர் திருமேனிகள் உள்ளன.. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை, சித்திர சபை என பஞ்ச சபைக்கும் இந்த கோவிலில் தனித்தனியாக உற்சவ திருமேனிகள் உள்ளன. பஞ்ச சபை கொண்ட கோவிலில் நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்) சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவத் திருமேனிகள், சுவாமி கோவில் 6-கால் பீடத்திலும், இதர 4 சபை நடராஜர், சிவகாமி அம்மன் 100 கால் மண்டபம் என இரு இடங்களிலும் எழுந்தருளினர். அப்போது பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலபூஜைகள் முடிந்து நேற்று காலை பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் 4 ஆடி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆருத்ரா தரிசன விழாவையொட்டி திரளான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
இ்ம்மையில் நன்மை தருவார் கோவில்
இதே போல இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல சோழவந்தான் பிரளயநாதகோவில், திருவேடகம் ஏடகநாதர்கோவில், தென்கரை மூலநாதர் கோவில்,கிருஷ்ணாபுரம் காலனி ஸ்ரீ கோகணேஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
பால்சுனை கண்ட சிவபெருமான்
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவபெருமானின் தலையில் வெள்ளிக் கீரிடமும், 1008 ருத்ராட்ச மாலையும் அணிவிக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
Related Tags :
Next Story