மாஞ்சோலை பகுதியில் சுற்றித் திரியும் யானை


மாஞ்சோலை பகுதியில் சுற்றித் திரியும் யானை
x
தினத்தந்தி 21 Dec 2021 2:20 AM IST (Updated: 21 Dec 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

மாஞ்சோலை பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது.

அம்பை:
மணிமுத்தாறு அருவிக்கு மேலே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியான இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், மிளா உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்களும் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் வனஉயிரினங்கள் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இருப்பிடத்தை மாற்றி மாற்றி அமைக்கும். அதனடிப்படையில் தற்போது குளிர் காலம் தொடங்கியதைெயாட்டி உடல் சூட்டின் வெப்பத்திற்காக வயது முதிர்ந்த யானை ஒன்று மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளில் பகுதிகளில் சுற்றித் திரிகிறது. ஆனால் இந்த ஒற்றை யானையால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. உணவுக்காக மட்டும் அங்கு பயிரிடப்பட்டிருக்கும் வாழை, கிழங்கு பயிர்களை எடுத்துக்கொண்டு தானாகவே செல்கிறது என அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

Next Story