மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; என்ஜினீயர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; என்ஜினீயர் சாவு
x
தினத்தந்தி 21 Dec 2021 2:24 AM IST (Updated: 21 Dec 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில்  என்ஜினீயர் பரிதாபமாக பலியானார். நண்பர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்
நெல்லை சந்திப்பு உடையார்பட்டி இருதய நகரைச் சேர்ந்தவர் இசக்கி மகன் கார்த்திக் (வயது 23). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கட்டிட என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் நெல்லை அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (40) என்பவரை ஏற்றிக்கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கார்த்திக் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story