போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 2:39 AM IST (Updated: 21 Dec 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரியில் தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இங்கு மேற்கு வங்காள மாநிலம் பர்கோனா மாவட்டம் ஜிபாண்டா பகுதியைச் சேர்ந்த நரைன் (வயது 24) தொழிலாளியாக வேலை செய்தார். இவர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ராயகிரிக்கு அழைத்து வந்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், மேற்கு வங்காள மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக மேற்கு வங்காள மாநில போலீசார் ராயகிரிக்கு வந்து சிறுமியை மீட்டனர். மேலும் நரைனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மேற்கு வங்காள மாநிலத்துக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.

Next Story