திருடப்பட்ட கோவில் உண்டியல் ஏரியில் மீட்பு


திருடப்பட்ட கோவில் உண்டியல் ஏரியில் மீட்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 3:44 AM IST (Updated: 21 Dec 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

திருடப்பட்ட கோவில் உண்டியல் ஏரியில் மீட்கப்பட்டது.

செந்துறை:
செந்துறை அருகே உள்ள குவாகம் கிராமத்தின் முள் காட்டின் இடையே கண்ணங்குழி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நிரம்பி வழிந்தது. தற்போது மழை பெய்யாததால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து உள்ளது. இந்த நிலையில் அவ்வழியே சென்ற இளைஞர்கள் ஏறி நடுவே உண்டியல் தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அந்த உண்டியலை மீட்டு பார்த்தபோது வீரனார் கோவில் உண்டியல் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து உண்டியலை குவாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அது எந்த ஊர் கோவிலில் இருந்து திருட்டுபோன உண்டியல் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story