சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நடைமேடைக்கும், மின்சார ரெயிலிலுக்கும் இடையில் சிக்கி சிறுவன் பலி


சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நடைமேடைக்கும், மின்சார ரெயிலிலுக்கும் இடையில் சிக்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 21 Dec 2021 2:44 PM IST (Updated: 21 Dec 2021 2:44 PM IST)
t-max-icont-min-icon

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நடைமேடைக்கும், மின்சார ரெயிலிலுக்கும் இடையில் சிக்கி, தாத்தா கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கோபி. பெயிண்டர். இவருடைய மகன் பச்சையப்பன் (வயது 11). இவன், நேற்று முன்தினம் மாலை வேடந்தாங்கலில் உள்ள தனது தாத்தா ராஜேந்திரனுடன், சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் தாத்தாவும், பேரனும் ரெயிலில் இருந்து இறங்கி இயற்கை உபாதையை கழித்ததாக தெரிகிறது. அதற்குள் ரெயில் புறப்பட்டதால் இருவரும் ஓடிச்சென்று ரெயிலில் ஏற முயன்றனர்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் பச்சையப்பன் மின்சார ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி, தாத்தா கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

எழும்பூர் ரெயில்வே போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story