பொதுமக்கள் சாலைமறியல் முயற்சி
பொதுமக்கள் சாலைமறியல் முயற்சி
திருப்பூர் மாநகராட்சி, நல்லூர் 3வது மண்டலத்திற்குட்பட்ட புதிய வார்டு எண் 48 க்கு உட்பட்ட காங்கேயம் மெயின் ரோடு, பள்ளக்காட்டு புதூர் பிரிவு அருகில் காசா எண் 200 புதிதாக மனைப்பிரிவு அமைக்க 10 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் அருகில் உள்ள காசா எண் 207 இருந்து 40 அடி அகலமுள்ள பொது தடம் 2006ம் ஆண்டு நல்லூர் நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டு புதிதாக அமைக்கும் காசா 200 காளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக அமைக்கும் மனைப்பிரிவில் பழைய தடத்துடன் இணைக்காமல் மாற்று இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மேடான பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் மழைநீர் வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த நாட்களில் சென்னை போன்ற பெரு நகரங்களில் மழைநீர் வெளியேற வழியில்லா சூழ்நிலை உருவாகியது போல் இங்கும் வருங்காலத்தில் இப்பகுதியில் மழைநீர் வெளியேற முடியதா வாறு மனைப்பிரிவு அமைக்க உள்ளனர். எனவே அதனை தடுக்கும் வகையில் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளக்காட்டு புதூர் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி உதவி ஆணையாளர் வாசுகுமார், பொறியாளர் ஆறுமுகம், நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் புதிதாக அமையும் மனைப்பிரிவு இடத்தை ஆய்வு செய்த பின் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாக அமைக்கப்படும் பாதை விரைவில் பழைய பாதையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இணைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story