பெருந்தரங்குடி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
பெருந்தரங்குடி ஊராட்சியில் நடந்த கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கொரடாச்சேரி:-
பெருந்தரங்குடி ஊராட்சியில் நடந்த கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு முகாம்
கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
முகாமில் கால்நடைகளுக்கு சினைபரிசோதனை, மலட்டு தன்மை நீக்கம், குடற்புழுநீக்கம், தடுப்பூசிபோடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கால்நடை வளர்ப்போருக்கு கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
குடற்புழு நீக்கம்
முகாமில் கால்நடை வளர்ப்போருக்கு 100 கிலோ தாதுஉப்புக்கலவை வழங்கப்பட்டது. தொடர்ந்து 87 கன்றுகளுக்கும், 264 வெள்ளாடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. 526 கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 52 கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். இதில் கால்நடை இணை இயக்குனர் தனபாலன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏழிலரசன், பெருந்தரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story