சாத்தான்குளம் பகுதியில் இன்று மின்தடை


சாத்தான்குளம் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 21 Dec 2021 7:46 PM IST (Updated: 21 Dec 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என திருச்செந்தூர் கோட்ட மின்வினியோகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்ட (மின் விநியோகம்) செயற்பொறியாளர் (பொறுப்பு) ராம்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி தரம் உயர்த்தும் பணி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அதனால் இந்த உபமின் நிலையத்தை சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தை சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிறுப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும், பழனியப்பபுரம் உப மின்நிலையத்தைச் சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதியிலும் இன்று பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் ெதரிவித்துள்ளார்.

Next Story