மானிய விலையில் விதைகள் வினியோகம்


மானிய விலையில் விதைகள் வினியோகம்
x
தினத்தந்தி 21 Dec 2021 7:58 PM IST (Updated: 21 Dec 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

மானிய விலையில் விதைகள் வினியோகம்

குமரலிங்கம் அருகிலுள்ள அரசு விதைப் பண்ணையில் சம்பா பருவத்தில் நெல், பயிறு விதைகள் பயிரிடப்பட்டு மானிய விலையில் சான்று விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
அரசு விதைப்பண்ணை
இதுகுறித்து மடத்துக்குளம் வட்டாரத்தில் மாநில அரசு விதைப்பண்ணை பாப்பான்குளம் கிராமத்தில் 26.88 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.
 இந்த விதைப் பண்ணையில் சம்பா பருவத்தில் நெல், பயிறு விதைகள் பயிரிடப்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து சான்று விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ஐந்து ஏக்கர் தூயமல்லி பாரம்பரிய ரகம் பயிரிடப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் சன்னரக சீரகசம்பா மற்றும் 13.6 3 ஏக்கர் கோ 51 நெல் விதை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
நெல் ரகம்
தூயமல்லி நெல் ரகமானது 135 நாட்கள் நடுத்தர வயதுடையது. பூச்சி நோய் தாக்குதலுக்கு மிகுந்த எதிர்ப்புத்திறன் உடையது. இயற்கை இடுபொருட்கள், கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, கொண்டே உயர் விளைச்சலை தரக்கூடிய நெல் ரகம் ஆகும். சன்ன ரக சீரகசம்பா 135 நாட்கள் நடுத்தர வயதுடையது. இது சீரகசம்பா வின் இயற்கையான மணம் உடையது. ஏக்கருக்கு 1.5 டன் வரை மகசூல் தரக்கூடியது. மேலும் 13.6 3 ஏக்கர் கோ 51 ஆதார நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரகம் 110 நாள் வயதுடைய சம்பா பருவத்திற்கு பயிரிட ஏதுவானது ஆகும். ஏக்கருக்கு 2500 கிலோ முதல் 2700 கிலோ வரை மகசூல் தரவல்லது. இவ்வாறு மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி  கூறினார். பண்ணை மேலாளர் கோகுல் மற்றும் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.
முன்னதாக விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

Next Story