சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி தீவிரம்
சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி தீவிரம்
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குன்னூர் மலைப்பாதை
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் 14 கொண்டை ஊசி வளைவு களும் குறுகிய வளைவுகளும் உள்ளன. இதனால் வாகன விபத்து ஏற்படு வதை தடுக்க வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து மெது வாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
அபாயகரமான இடத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளன. இந்த பாதையில் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையில் விரிசல்
எனவே சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விரிவாக்க பணி நடந்த இடத்தில் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்த வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் கம்பிகள் கட்டப்பட்டு ராட்சத எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சீரமைப்பு பணி 10 நாட்களில் முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
இந்த நிலையில் கனரக வாகனங்கள் தூதூர்மட்டம், கொலக்கொம்பை பகுதிகளுக்கு செல்ல கோத்தகிரி மற்றும் எல்லநள்ளி வழியாக சுற்றி வர வேண்டும் என்பதால் காலவிரயம் மற்றும் டீசல் செலவு அதிகரித்து வருகிறது.
எனவே கொலக்கொம்பை, தூதூர்மட்டம், மஞ்சூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் செல்ல அனுமதிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story