திருவள்ளூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது


திருவள்ளூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 9:12 PM IST (Updated: 21 Dec 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை

திருவள்ளூரை அடுத்த மப்பேடு கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த அப்துல் அசின் (வயது 20) உள்ளிட்ட 5 பேர் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் கடந்த 15-ந்தேதியன்று அப்துல் அசின் உள்ளிட்ட 5 பேரை கையாலும் உருட்டுக்கட்டையாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்த தினேஷ் (25), செய்யம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (32) மப்பேடு பகுதியை சேர்ந்த முத்தீஸ் (28) ஆகியோரை கடந்த 16-ந்தேதி அன்று கைது செய்தனர்.

மேலும் 8 பேர் கைது

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியை சேர்ந்த திவாகர் (25), திமியோன் (28), கடம்பத்தூரை சேர்ந்த ராஜேஷ் (29), சூர்யா (29), தினேஷ் (24) முகேஷ் (24), பிரகாஷ் (19) ஸ்டீபன் (29) ஆகியோரை மப்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story