மூங்கில்துறைப்பட்டு அருகே குழந்தைகள் உள்பட 14 பேருக்கு வாந்தி பேதி


மூங்கில்துறைப்பட்டு அருகே  குழந்தைகள் உள்பட 14 பேருக்கு வாந்தி பேதி
x
தினத்தந்தி 21 Dec 2021 9:41 PM IST (Updated: 21 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே குழந்தைகள் உள்பட 14 பேருக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டதை அடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்

மூங்கில்துறைப்பட்டு,

வாந்தி-பேதி

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வட மாமந்தூர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை சோ்ந்த தோகைமயில்(வயது 70), வள்ளி(57), சீனிவாசன்(45), கோவிந்தன்(63), ஜெயஸ்ரீ(3), விஜயஸ்ரீ(6), அரசன்(55), முனுசாமி(55) மற்றும் 3 குழந்தைகள் உள்பட 14 பேருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

அதிகாரிகள் விசாரணை

இதுபற்றிய தகவலறிந்து சுகாதாரத் துறையினர் அங்கு விரைந்து வந்து முகாமிட்டு வாந்தி-பேதிக்கான காரணம் குறித்து கிராமமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தனர்.
பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இங்கு சில பகுதிகளில் பள்ளம் தோண்டி குழாய் மூலம் குடிநீரை பிடித்து பயன்படுத்துகின்றனர். பள்ளம் தோண்டிய பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்த குடிநீரை பருகியதால் வாந்தி-பேதி ஏற்பட்டிருக்கலாம். எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
அந்த பகுதி மக்கள் கூறும்போது, ஒரு பகுதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் வேகமாக பாய்கிறது. மற்றொரு பகுதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் குறைவாக வருவதால் அங்கு பள்ளம் தோண்டி தண்ணீரை பிடித்து பருக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். 

Next Story