இன்னுயிர் காப்போம் திட்ட ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்னுயிர் காப்போம் திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 6 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 12 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குறித்த விவரங்களை அறிய 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர் காக்கும் சேவையை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்" என்றார். கூட்டத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story