தரைப்பாலத்தில் உடலை வைத்து எரித்த கிராம மக்கள்


தரைப்பாலத்தில் உடலை வைத்து எரித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:00 PM IST (Updated: 21 Dec 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே சுடுகாட்டு பாதை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் தரைப்பாலத்தில் உடலை வைத்து கிராம மக்கள் எரித்தனர்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே நகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் மணிமுக்தா ஆற்றை கடந்து அக்கரையில் உள்ள சுடுகாட்டில் புதைத்து வருகிறார்கள். 
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையும், தரைப்பாலத்தின் ஒரு பகுதியும் அடித்துச்செல்லப்பட்டது. தற்போதும் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால் அக்கரையில் உள்ள விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். 

தரைப்பாலத்தில் உடல் எரிப்பு 

இந்த நிலையில் நகர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் இறந்தார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் மணிமுக்தாற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்வதாலும், சுடுகாட்டிற்கு செல்ல பாதை மற்றும் தரைப்பாலம் இல்லாததாலும் கிராம மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். எனவே வேறு வழியின்றி தரைப்பாலத்தில் பெண்ணின் உடலை வைத்து எரித்தனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் விரைவில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story