பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி சாவில் சந்தேகம் போலீசில் தாயார் புகார்


பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த  பிளஸ் 1 மாணவி சாவில் சந்தேகம் போலீசில் தாயார் புகார்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:04 PM IST (Updated: 21 Dec 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த பிளஸ் 1 மாணவி சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் தாயார் புகார் செய்தார்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள மண்ணேரி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் பாவனா (வயது 15). இவர் செல்லியம்பட்டி பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 
இந்த நிலையில் மாணவியின் தாயார் தாமரைச்செல்வி மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் நல்ல நிலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள் திடீரென உயிரிழந்துள்ளார். அவளுடைய சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story