கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள்-அமைச்சர் காந்தி மனுக்களை பெறுகிறார்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள்-அமைச்சர் காந்தி மனுக்களை பெறுகிறார்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:14 PM IST (Updated: 21 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கிறது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு மனுக்களை பெறுகிறார்.

கிருஷ்ணகிரி, டிச.22-
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை), நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது. 
அதன்படி நாளை காலை 10 மணிக்கு ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனி பகுதியிலும், காலை 10.45 மணிக்கு அலசநத்தம் பகுதியிலும், காலை 11.30 மணிக்கு ஜூஜூவாடி பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு மத்திகிரி பகுதியிலும், மாலை 3 மணிக்கு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சந்தைமேடு சமுதாய கூடத்திலும், மாலை 4 மணிக்கு கெலமங்கலம் பேரூராட்சி எஸ்.ஆர்.எம். மகாலிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அமைச்சர் காந்தி
நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி நகராட்சி பழைய பேட்டை முருகன் கோவில் சாலை பகுதியிலும், காலை 10.30 மணிக்கு மீனாட்சி மகால் திருமண மண்டபத்திலும், காலை 11.30 மணிக்கு காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகிலும், மதியம் 12.30 மணிக்கு நாகோஜனஅள்ளி பேரூராட்சி, என்.தட்டக்கல் பகுதியிலும், மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகிலும், மாலை 5 மணிக்கு பர்கூர் பேரூராட்சி காமாட்சி திருமண மண்டபத்திலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும். இந்த முகாம்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேரடியாக மனுக்களை பெறுகிறார். இந்த மனுக்கள் மீது முறையாகவும், குறித்த காலத்திற்குள்ளும் விசாரணை நடத்தி பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story