திருப்பத்தூரில் மாற்றுதிறனாளிகள் முகாமில் இடைத்தரகர்கள் ஆதிக்கம். திடீர் போராட்டத்தால் பரபரப்பு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மாற்றுத்துறனாளிகள் முகாமில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாகக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மாற்றுத்துறனாளிகள் முகாமில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாகக்கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடைத்தரகர்கள்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் செவ்வாய்கிழமை தோறும் மாற்றுதிறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த முகாமில் இடைதரகர்கள் ஆதிக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இடைத்தரகர்களாக செயல்படுபவர்கள் 10-க்கும் மேற்பட்ட விண்ணப்படிவங்களை மொத்தமாக கொண்டுவந்து அதில் கையெழுத்து வாங்கி செல்கின்றனர். இதனை மாற்றுதிறனாளிகள் நலத்துறையினர் கண்டு கொள்ளவதில்லை என கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல முகாம் நடந்தது. இதில் ஒரே நபர் 20-க்கும் மேற்பட்ட விண்ணபங்களை கொடுத்துள்ளார்.
திடீர் போராட்டம்
இதனை பார்த்து கொண்டிருந்த சக மாற்றுதிறனாளிகள் இதனை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக கூறி திடீரென முகாம் நடக்கும் இடத்தில் கூச்சல் போட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதனை அறிந்த அதிகாரிகள் போராட்டம் நடத்த சென்ற மாற்றுதிறனாளிகளை சமதானம் செய்து அவர்களை கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் அழைத்து சென்றனர்.
அங்கு அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து நடந்த விபரங்களை கலெக்டரிடம் கூறினர். அதைத்தொடர்ந்து கலெக்டர், மாற்றுதிறனாளிகள் முகாமில் இடைத்தரகர்கள் இருந்தால் அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்றும், மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை பெற்றவர்கள் முறைகேடாக வாங்கி இருந்தால் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
====
Related Tags :
Next Story