கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில்  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2021 10:58 PM IST (Updated: 21 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன்குமார், செல்வ போதகர், ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த கிருஷ்ணன், செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினா். இதில் மாவட்ட இணைச் செயலாளர்கள் சரவணன், வீரபத்திரன், அரவிந்த், துணைச் செயலாளர் குமார் மற்றும் ஆரோக்கிய செல்வி, மணிமொழி, கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story