புதிதாக 12 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
12 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், களப்பணியாளர்கள் மற்றும் சோதனை சாவடிகள் மூலமாகவும் 2 ஆயிரத்து 765 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 5 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் என மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அதாவது குருந்தன்கோட்டில் 4 பேருக்கும், மேல்புறம், திருவட்டார் மற்றும் நாகர்கோவிலில் தலா 2 பேருக்கும், தோவாளை மற்றும் தக்கலையில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரிசோதனை
குமரி மாவட்டத்தில் தற்போது வரை 13 லட்சத்து 74 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் தற்போது வரை 60 ஆயிரத்து 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 58 ஆயிரத்து 232 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 34 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 15 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 19 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 11 லட்சத்து 68 ஆயிரத்து 801 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 8 லட்சத்து 2 ஆயிரத்து 971 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story