ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:05 AM IST (Updated: 22 Dec 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி
காரைக்குடி சூடாமணிபுரம் வடக்கு பகுதி, பாரதியார் நகர், வல்லாளர் தெரு, அழகப்பாபுரம், சாமியார்தோட்டம் பின்புறம், குட்ஷெத்ரோடு, மருதுபாண்டியர்நகர், முத்துராமலிங்கதேவர் நகர், மூப்பனார் தெரு, பெரியார்நகர், வகுத்தூரணி பகுதி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதிக்கு பட்டா கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு நேற்று காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், அந்த பகுதியில் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் அந்த பகுதியில் பட்டா வழங்கக்கோரி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் முடிவு செய்ததாக கூறினர். ஆர்ப்பாட்டதை முன்னிட்டு காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story