விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி


விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 22 Dec 2021 12:06 AM IST (Updated: 22 Dec 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி

ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள மேலவாணியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மகன் தர்ஷன்(வயது 20). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை இவர் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியின் பின் பகுதியில் மோதினார். இதில் ரோட்டில் தவறிவிழுந்த தர்ஷன் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் கீழக்கரை தட்டாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜீவராஜ்(34) என்பவரை கைது செய்தனர்.

Next Story