மனைவியின் கண் எதிரே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


மனைவியின் கண் எதிரே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 22 Dec 2021 12:24 AM IST (Updated: 22 Dec 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

புகளூர் அருகே மனைவியின் கண் எதிரே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

நொய்யல், 
தகராறு
புகளூர் அருகே ஹைஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 42), தொழிலாளி. இவரது மனைவி கனகா (32). கணவன்-மனைவி இருவரும் ஹைஸ்கூல் மேடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீரமணி (42) என்பவர் மணியை பார்த்து தனது மகனை இழிவாக பேசியதாக கூறி தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அரிவாள் வெட்டு
இதில் ஆத்திரமடைந்த வீரமணி தான் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து மணியை சரமாரியாக வெட்டியுள்ளார். மனைவியின் கண் எதிரே இந்த சம்பவம் நடைபெற்றதால் அவர் தனது கணவரை காப்பாற்றுமாறு அலறி துடித்தார். இதையடுத்து, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள்  மணியை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதேபோல் மணி தாக்கியதில் காயம் அடைந்த வீரமணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story