இந்த ஆண்டு இதுவரை சாலை விபத்துகளில் 262 பேர் பலி
இந்த ஆண்டு இதுவரை சாலை விபத்துகளில் 262 பேர் பலியாகியுள்ளனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கவும், குறைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி விபத்து நடைபெறும் சாலைகள் கண்டறியப்பட்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சாலை போக்குவரத்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. போக்குவரத்து சிக்னல் கம்பங்களும், ஒளிரும் மின் விளக்குகளும், இரும்பு தடுப்புகளும் விபத்து அதிகம் நடைபெறும் சாலைகளில் வைக்கப்படுகிறது.
262 பேர் சாவு
இந்தநிலையில் மாவட்டத்தில் இந்த ஆண்டில் (2021) ஜனவரி மாதம் முதல் இதுவரை அதாவது நேற்று முன்தினம் வரை 1,238 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 262 பேர் இறந்துள்ளனர். 1,655 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனை கடந்த ஆண்டுடன் (2020) ஒப்பிடும் போது விபத்துகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 1,092 சாலை விபத்துகளில் 179 பேர் இறந்திருந்தனர். 1,516 பேர் காயமடைந்திருந்தனர். கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்து சற்று குறைந்திருந்ததால் விபத்துகள் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story