தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பாக 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு விரைவாக பேசி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சமுத்திரம், ஏ.ஐ.டி.யூ.சி. போக்குவரத்துக்கழக பொதுச் செயலாளர் பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story