கோமாரி நோய் தாக்கி சினை பசு சாவு
கோமாரி நோய் தாக்கி சினை பசு செத்தது.
தா.பழூர்:
தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி பட்டத்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். விவசாயி. இவரது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதில் ஒரு சினை பசுவுக்கு கோமாரி நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பசு செத்தது.
இந்நிலையில் அரசு சார்பில் கோமாரி நோயை தடுப்பதற்கான மருத்துவ முகாம் எதுவும் காரைகுறிச்சி கிராமத்தில் நடைபெறாததால் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story