விவசாயி வீட்டில் தீப்பிடித்ததில் ரூ.75 ஆயிரம், 9 பவுன் நகைகள் எரிந்து நாசம்
விவசாயி வீட்டில் தீப்பிடித்ததில் ரூ.75 ஆயிரம், 9 பவுன் நகைகள் எரிந்து நாசமாகின.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரங்குடி கிராமம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்(வயது 55). விவசாயியான இவரும், இவரது மனைவி சுதாவும் நேற்றிரவு வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அவர்களது மகள் அனுப்பிரியா சத்தம்போட்டதால், 2 பேரும் வீட்டில் இருந்து வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்தில் வீட்டில் அவர்களது மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மற்றும் 9 பவுன் நகைகள், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பத்திரங்கள், கல்லூரி நோட்டுகள், துணிமணிகள், பீரோக்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. இது குறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story