திருட்டு, போக்குவரத்தை கண்காணிக்க 30 கேமராக்கள் அமைப்பு


திருட்டு, போக்குவரத்தை கண்காணிக்க 30 கேமராக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2021 8:23 PM (Updated: 21 Dec 2021 8:23 PM)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் திருட்டு, போக்குவரத்தை கண்காணிக்க 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குழித்துறை, 
மார்த்தாண்டத்தில் திருட்டு, போக்குவரத்தை கண்காணிக்க 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
மார்த்தாண்டம் பகுதியில் திருட்டு, தங்க சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களும், போக்குவரத்து நெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்த்தாண்டம் நகரில் விபத்தை தடுக்க 40 கி.மீ. வேகக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
இந்தநிலையில், திருட்டு சம்பவங்களை கண்டு பிடிக்கவும், வேக கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கு காரணமான வாகனங்களை உடனே கண்டுபிடிக்கவும் நகரின் முக்கிய பகுதிகளில் 55 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் முடிவெடுத்து அதற்காக முயற்சிகளில் ஈடுபட்டார். 
அதன்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் முதல் கட்டமாக ரூ.5 லட்சம் செலவில் 30 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 25 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் இன்ஸ்பெக்டர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
கட்டுப்பாட்டு அறை
இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தையும் இணைத்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தனி கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிபெருக்கி வசதியும்  அமைக்கப்பட உள்ளது.
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் முன்னிலையில் கண்காணிப்பு கேமரா இயக்க பரிசோதனை நடத்தப்பட்டது.  

Next Story