ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:02 AM IST (Updated: 22 Dec 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்கி உரிய அரசாணை வெளியிட வேண்டும் என்பன உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ராமநாதன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் பிரிதிவிராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனி, மாவட்ட பொருளாளர் மாணிக்கவாசகம், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோயில் பிச்சை, சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் துரை சிங், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் கங்காதரன் ஆகியோர் பேசினார்கள். மாவட்ட இணைச் செயலாளர் சிக்கந்தர் பாவா நன்றி கூறினார்.

Next Story