எடப்பாடி அருகே 6½ வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போலீசார் விசாரணை


எடப்பாடி அருகே 6½ வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2021 2:14 AM IST (Updated: 22 Dec 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே 6½ வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்ககிரி,
6½ வயது மகள்
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 10 ஆண்டுகளாக குழந்தை பிறக்காத நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த அடுத்த ஆண்டே (2016-ம் ஆண்டு) கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் 2018-ம் ஆண்டு ஊரில் உள்ளவர்கள் சமாதானம் செய்து அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தனர். 
அதன்பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் மகளுக்கு தற்போது 6½ வயது ஆகிறது. அவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
பாலியல் பலாத்காரம்
இந்த நிலையில் பெற்ற மகள் என்றும் பாராமல் 6½ வயது மகளை லாரி டிரைவர் சமீபகாலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 15-ந் தேதி சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்படவே அவளின் தாயார் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சன்றார். 
அப்போது சிறுமியின் உடல்நலம் குறித்து அவர்கள் இருவரிடமும் டாக்டர் விசாரித்தார். அப்போது தான் மகளின் வாயில் துணியால் கட்டி அவளது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த விபரீத சம்பவம் அவளது தாயாருக்கு தெரியவந்தது. 
போக்சோ சட்டத்தில் வழக்கு
இதையடுத்து தனது கணவரின் கொடுஞ்செயல் குறித்து அந்த பெண் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த சிறுமியின் தந்தையான லாரி டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
மேலும் தலைமறைவாகி உள்ள லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story