கார் மீது லாரி மோதல்: மூதாட்டி உள்பட 3 பேர் பலி


கார் மீது லாரி மோதல்: மூதாட்டி உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 22 Dec 2021 2:36 AM IST (Updated: 22 Dec 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் பலியானார்கள்.

பெலகாவி:

லாரி - கார் மோதல்

  பெலகாவி அருகே இரேபாகேவாடி கிராமம் வழியாக மும்பை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி, கார் மீது மோதியது. இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்தனர்.

  கார் டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதுபற்றி அறிந்ததும் இரேபாகேவாடி போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

  விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்புராவை சேர்ந்த சுசீலா பெர்னாண்டஸ்(வயது 60), சையது இஸ்மாயில்(65), வாசிம்கான்(40) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் எல்லாப்புராவில் இருந்து பெலகாவிக்கு சென்றபோது விபத்து நடந்ததும் தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து இரேபாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story