பொன்னேரி அருகே ராணுவ உடையில் டிரைவரிடம் வழிப்பறி; வாலிபர் கைது


பொன்னேரி அருகே ராணுவ உடையில் டிரைவரிடம் வழிப்பறி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 1:56 PM IST (Updated: 22 Dec 2021 1:56 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே ராணுவ உடையில் டிரைவரிடம் வழிப்பறி செய்தது தொர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி,

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 34). லாரி டிரைவர். இவர் கேரளாவில் இருந்து ரப்பர் லோடு ஏற்றிக்கொண்டு பொன்னேரி அடுத்த இருளிப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்றார்.

பின்னர் லாரியில் உள்ள பொருட்களோடு எடை போடுவதற்காக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் ஜனப்பன்சத்திரம் கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். சாலையில் ராணுவ உடையில் டிப்-டாப்பாக நின்று கொண்டிருந்தவர் லாரியை வழிமறித்து தடுத்து நிறுத்தினார் பின்னர் லாரிக்கான ஆவணங்களை கேட்டார்.

சுரேஷ்குமார் ஆவணங்களை கொடுக்க மறுக்கவே திடீரென கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். அப்போது டிரைவர் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து ராணுவ உடையில் இருந்த அவரை மடக்கி பிடித்தனர் ராணுவ உடை அணிந்து இருந்த அவரை சோழவரம் போலீசில் ஒப்படைத்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் கபூரா மாலுகா மாவட்டம் பாரத்பூரை சேர்ந்த சத்யவீர் (23) என்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலலீசார் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை கைப்பற்றினர். அவரை பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story