பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் தகராறு: சமாதான கூட்டத்தில் மீனவர்களிடையே கடும் வாக்குவாதம்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் போது மோதல் ஏற்பட்ட நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந்தேதி நடந்த சமாதான கூட்ட முடிவின்படி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கோட்டைக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஆண்டிக்குப்பம் மீனவர்கள் இருதரப்பினராக மீன்பிடித்தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. பின்னர் இதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பிரிவாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது தகராறு ஏற்படுத்துவதாக திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோட்டைக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 4 தரப்பினருடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்பட்ட முடிவு எட்டப்படாத நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் ஒரு தரப்பு மீனவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சமாதான கூட்டத்தை 2 நாட்களுக்கு ஆர்.டி.ஓ. தள்ளி வைத்தார் இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story