தேக்கு மரக்கட்டைகள் திருடிய 5 பேர் கைது


தேக்கு மரக்கட்டைகள் திருடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 5:33 PM IST (Updated: 22 Dec 2021 5:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரூ.1¾ லட்சம் தேக்கு மரக்கட்டைகள் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.1¾ லட்சம் மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேக்கு மரக்கட்டைகள் திருட்டு
தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆனந்தநகரை சேர்ந்தவர் இம்மானுவேல். இவருடைய மகன் ஆபிரகாம் (வயது 37). இவருக்கு சொந்தமான குடோன் புதிய துறைமுகம் சாலையில் அமைந்து உள்ளது. இந்த குடோனில் இருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 100 தேக்கு மரக்கட்டைகளை மர்ம நபர்கள் கடந்த 13-ந் தேதி திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ஆபிரகாம் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். அங்கு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். 
5 பேர் கைது
அப்போது, தூத்துக்குடி அருகே உள்ள வீரநாயக்கன் தட்டை சேர்ந்த தங்கமாரியப்பன் (40), ராமகிருஷ்ணன் (33), முத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (36), கிருஷ்ணாநகரை சேர்ந்த சம்சு மஜித் (36), கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் (40) ஆகிய 5 பேரும் லோடு வேனில் தேக்கு மரக்கட்டைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

Next Story