9 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


9 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2021 7:17 PM IST (Updated: 22 Dec 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் கலெக்டர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:-

நாகையில் கலெக்டர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட செயலாளர் அன்பழகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் வேல்கண்ணன், மாவட்ட பொருளாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சலுகைகள்

வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெறும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 
100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story