தாலுகா அலுவலகத்தில் மோடி படத்தை வைக்க முயன்ற பா.ஜனதாவினரால் பரபரப்பு
தாலுகா அலுவலகத்தில் மோடி படத்தை வைக்க முயன்ற பா.ஜனதாவினரால் பரபரப்பு
ஓசூர்:
ஓசூர் தாலுகா அலுவலகத்தில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைப்பதற்காக பா.ஜனதா மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் மோடி படத்தை எடுத்து வந்தனர். ஆனால் படத்தை வைப்பதற்கு உடனே அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கட்சி நிர்வாகிகள், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலக வேலையாக வெளியே சென்று இருந்த தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் நாகராஜை தொடர்பு கொண்டு, பிரதமர் படத்தை தாலுகா அலுவலகத்தில் ஒப்படையுங்கள். ஓரிரு நாட்களில் படத்தை வைக்க எற்பாடு செய்கிறேன் என்று உறுதி அளித்ததாக பா.ஜனதாவினர் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story